பொங்கல் பரிசுத் தொகுப்பு... 27/11/2019

பொங்கல் பரிசுத் தொகுப்பு - நவ.29ல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..!
Nov 27, 2019


ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, வருகிற 29ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்திற்காக, 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறையைப் போலவே, இம்முறையும், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இந்த திட்டத்தை, வருகிற 29ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில், நடைபெறும் நிகழ்வில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். குறிப்பிட்ட பயனாளிகளுக்கு நேரடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் முதலமைச்சர், காணொலி காட்சி மூலம், பல்வேறு மாவட்டங்களிலும் அத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. தற்போது, சர்க்கரை பெறும் ரேசன் கார்டுதாரர்கள், அரிசியையும் பெறுவதற்காக விண்ணப்பித்து வருவதால், பொங்கல் பரிசு தொகுப்பை பெறும் ரேசன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை 2 கோடிக்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதனை கணக்கிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தனது அரசாணையில் தெரிவித்திருக்கிறது.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019