5% வரை குறைத்துள்ளது வைரங்களின் விலை..! 06/11/2019

வைரங்களின் விலையை 5 % வரை குறைத்தது De Beers நிறுவனம்..!
Nov 06, 2019


தொழில் நெருக்கடி காரணமாக டி பியர்ஸ் நிறுவனம் வைரங்களின் விலையை 5 சதவீதம் வரை குறைத்துள்ளது.

உலகின் மிகப் பெரிய வைர வியாபார நிறுவனமான டி பியர்ஸ், ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் தலைசிறந்த வைரங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்து வருகிறது.



இந்நிலையில் வைர விற்பனையில் மிகப் பெரிய சந்தையான இந்தியா, இஸ்ரேல் மற்றும் பெல்ஜியத்தில் செயற்கை வைரங்களின் விற்பனை அதிக அளவில் இருப்பதால் உண்மையான வைரக்கற்களின் விற்பனை மந்தமானதாகக் கூறப்படுகிறது.

மேலும் வைரங்களை அறுப்பவர்கள், பட்டை தீட்டுபவர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் டி பியர்ஸ் நிறுவனத்தின் வைர விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வைர வியாபாரியான ஸிம்னிஸ்கி தெரிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் வைரக்கற்களின் விலையை 5 சதவீதம் வரை அந்த நிறுவனம் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019