தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... 28/11/2019

5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...
Nov 28, 2019


தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

8ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோன்று, 5ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடத்தப்படுகின்றன.

காலை 10.15 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்தாள் படித்துப் பார்ப்பதற்கும், விடைத்தாளில் மாணவரின் தேர்வு எண் உள்ளிட்டவற்றை நிரப்புவதற்கு 15 நிமிடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

தேர்வு தேதி - பாடம்

30.03.2020 - தழிழ்
02.04.2020 - ஆங்கிலம்
08.04.2020 - கணிதம்
15.04.2020 - அறிவியல்
17.04.2020 - சமூகஅறிவியல்

5ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

தேர்வு தேதி - பாடம்

15.04.2020 - தமிழ்
17.04.2020 - ஆங்கிலம்
20.04.2020-கணிதம்..

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019