அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் 8 இடங்களில் தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன... 07/11/2019
அயோத்தி தீர்ப்பு - 8 இடங்களில் தற்காலிக சிறைகள்...
Nov 07, 2019
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் மத்திய பாதுகாப்புப் படையினர் 4000 பேர் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எட்டு இடங்களில் தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி தொடர்பான 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் இம்மாத ஒரு வாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை முன்னிட்டு, வன்முறைகள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதற்றம் நிறைந்த இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் எட்டு தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை தேசப்பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முயல்வோரை முன்கூட்டியே கைது செய்து அடைக்கும் பொருட்டு அந்தச் சிறைகள் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மற்றும் மாநில நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் அயோத்தியில் முகாமிட்டு, நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
அம்மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் மற்றும் நிர்வாக அலுவலர்களுக்கு வரும் 30 ஆம் தேதி வரை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4,000 மத்திய பாதுகாப்புப் படையினரை மத்திய அரசு அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தகவல்கள் பரப்புவோரை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பை வாசிக்கவுள்ள அமர்வின், ஐந்து நீதிபதிகளில் ஒருவரான அசோக் பூசனின் நெவாடாவில் உள்ள வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைதி காக்கும்படி மக்களை அறிவுறுத்துமாறு வழிபாடுகளுக்கு தலைமை தாங்கும் இமாம்களுக்கு, மீரட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மத குருக்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
ராமருக்கு கோவில் எழுப்பி வரும் ராம் ஜென்ம பூமி அறக்கட்டளையின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் பிற மாநிலங்களும் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Comments
Post a Comment