வேறு நெட்வொர்க்குகளுக்கு அளவின்றி பேசலாம்..! 09/12/2019

வேறு நெட்வொர்க்குகளுக்கும் அளவின்றி பேசலாம் - ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவிப்பு
Dec 09, 2019


வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின. வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 12 ஆயிரம் நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட இரு நிறுவனங்களும் முன்னதாக மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கிற்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 1,000 நிமிடங்களும், 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 3,000 நிமிடங்களும் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 12,000 நிமிடங்களும் மட்டுமே பேச முடியும் என வரம்பு நிர்ணயித்திருந்தன

இந்த வரம்பைத் தாண்டி, வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் நம்பர்களுக்கு பேச ஒரு நிமிடத்திற்கு 6 பைசா செலுத்த வேண்டியிருந்தது.

கடந்த 3ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், கூட சேர்ந்து பிற நெட்வொர்க் நம்பர்களுக்கு பேச விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பை உடனே அறிந்த ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள், வேறு நெட்வொர்க்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அழைப்பு வரம்பு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளன. இதனால் இனி பிற நிறுவன நம்பர்களுக்கு வரம்பின்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கட்டண உயர்வு ஒரு பக்கம் வேதனை தந்தாலும், மேற்கண்ட கட்டுப்பாடுகளை நீக்கியிருப்பதால் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, ஆல் இன் ஒன் பிளான் மூலம் பிற நிறுவனங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இலவச அழைப்புகளை வழங்கி வருவதாக ஜியோ அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019