வரும் ஆண்டுகளில் ஆன்லைன் விற்பனை 5 சதவீதமாக உயரும்..! 04/12/2019
அடுத்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விற்பனை 5 சதவீதமாக உயரும்..!
Dec 04, 2019
எப்எம்சிஜி எனப்படும் அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் ஆன்லைன் மூலம் நடைபெறும் விற்பனை அடுத்த மூன்றாண்டுகளில் 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், பிக் பேஸ்கட், கிரோபர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆன்லைனில் கடை விரித்து, வீடுகளில் நேரடியாயாக விற்பனை செய்து வருகின்றன.
தற்போது இந்தியாவில் எப்எம்சிஜி துறையில் ஆன்லைன் விற்பனையின் விகிதம் 2 சதவீதமாகவும், 120 கோடி டாலராகவும் இருக்கிறது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இது 5 சதவீதமாகவும், 400 கோடி டாலராகவும் அதிகரிக்கும் என்று நீல்சன் நிறுவனம் கணித்துள்ளது.
இதுவே சீனாவில் ஆன்லைன் விற்பனையின் விகிதம் மொத்த அளவில் 17 சதவீதமாகவும், தென்கொரியாவில் 20 சதவீமாகவும் இருக்கிறது.
பெருநகரங்களில் வசிப்போர் அதிக விலையிலான மளிகை பொருட்களை ஆன்லைனில் வாங்குவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment