Posts

Showing posts from December, 2019

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது... 10/12/2019

Image
திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது... Dec 10, 2019 திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம்..

வேறு நெட்வொர்க்குகளுக்கு அளவின்றி பேசலாம்..! 09/12/2019

Image
வேறு நெட்வொர்க்குகளுக்கும் அளவின்றி பேசலாம் - ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவிப்பு Dec 09, 2019 வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின. வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 12 ஆயிரம் நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட இரு நிறுவனங்களும் முன்னதாக மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கிற்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 1,000 நிமிடங்களும், 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 3,000 நிமிடங்களும் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 12,000 நிமிடங்களும் மட்டுமே பேச முடியும் என வரம்பு நிர்ணயித்திருந்தன இந்த வரம்பைத் தாண்டி, வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் நம்பர்களுக்கு பேச ஒரு நிமிடத்திற்கு 6 பைசா செலுத்த வேண்டியிருந்தது. கடந்த 3ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், கூட சேர்ந்து பிற நெட்வொர்க் நம்பர்களுக்கு பேச விதிக்கப்பட்...

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019

Image
ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க 4 ஆண்டுகள் தடை... Dec 09, 2019 ஊக்க மருந்து சோதனை முறைகேட்டில் சிக்கியதால் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவிலுள்ள ஆய்வகத்தில் வீரர்களுக்கு நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில் ரஷ்ய அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில், ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்க ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி உள்ளிட்டவற்றில் ரஷ்யா கலந்து கொள்ள முடியாது. மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளை ரஷ்யா நடத்தவும் முடியாது. தடை உத்தரவை எதிர்த்து விளையாட்டுப் போட்டிகளுக்கான நீதிமன்ற தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் அவகாசம் உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு... 05/12/2019

Image
உலகத்தரத்திற்கு மெரினா கடற்கரை... சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு... Dec 05, 2019 ஆறு மாதத்திற்குள் மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குப்படுத்துவது, நடைப்பாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், அதன்பின்னர் கடற்கரை பகுதியில் உள்ள மீன் கடைகள் ஒழங்குபடுத்தப்பட்டு மீன்சந்தைக்கு மாற்றப்படும் என்றும் அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரை வணிக தளம் இல்லை என்று கூறியதுடன் 6 மாதத்திற்குள் மெரினாவை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.அதற்காக மாநகராட்சிக்கு முழு சுதந்திரம் அளிப்பதாகவும் நீதிபதிகள் ...

வரும் ஆண்டுகளில் ஆன்லைன் விற்பனை 5 சதவீதமாக உயரும்..! 04/12/2019

Image
அடுத்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விற்பனை 5 சதவீதமாக உயரும்..! Dec 04, 2019 எப்எம்சிஜி எனப்படும் அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் ஆன்லைன் மூலம் நடைபெறும் விற்பனை அடுத்த மூன்றாண்டுகளில் 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட், பிக் பேஸ்கட், கிரோபர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆன்லைனில் கடை விரித்து, வீடுகளில் நேரடியாயாக விற்பனை செய்து வருகின்றன. தற்போது இந்தியாவில் எப்எம்சிஜி துறையில் ஆன்லைன் விற்பனையின் விகிதம் 2 சதவீதமாகவும், 120 கோடி டாலராகவும் இருக்கிறது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இது 5 சதவீதமாகவும், 400 கோடி டாலராகவும் அதிகரிக்கும் என்று நீல்சன் நிறுவனம் கணித்துள்ளது. இதுவே சீனாவில் ஆன்லைன் விற்பனையின் விகிதம் மொத்த அளவில் 17 சதவீதமாகவும், தென்கொரியாவில் 20 சதவீமாகவும் இருக்கிறது. பெருநகரங்களில் வசிப்போர் அதிக விலையிலான மளிகை பொருட்களை ஆன்லைனில் வாங்குவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.