வேறு நெட்வொர்க்குகளுக்கும் அளவின்றி பேசலாம் - ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவிப்பு Dec 09, 2019 வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின. வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 12 ஆயிரம் நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட இரு நிறுவனங்களும் முன்னதாக மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கிற்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 1,000 நிமிடங்களும், 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 3,000 நிமிடங்களும் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 12,000 நிமிடங்களும் மட்டுமே பேச முடியும் என வரம்பு நிர்ணயித்திருந்தன இந்த வரம்பைத் தாண்டி, வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் நம்பர்களுக்கு பேச ஒரு நிமிடத்திற்கு 6 பைசா செலுத்த வேண்டியிருந்தது. கடந்த 3ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், கூட சேர்ந்து பிற நெட்வொர்க் நம்பர்களுக்கு பேச விதிக்கப்பட்...