அசாமில் பரபரப்பு..... 01/09/2019

தேசிய குடிமக்கள் பதிவேடு - அசாமில் பரபரப்பு.... Aug 31, 2019 அசாமில் இறுதிசெய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் சட்டபூர்வ இந்தியக் குடிமக்களாக ஏற்கப்பட்டுள்ளனர். அசாமில் வசித்து வரும் 19 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படாததால், அவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. ஒரு நாட்டின் சட்டபூர்வ குடிமக்களை உறுதிப்படுத்தவும், வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளங் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அசாமை பொறுத்தவரை, வங்கதேச எல்லையில் அமைந்திருப்பதால், அந்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏராளமானோர் குடியேறிவிடுகின்றனர். இந்நிலையில், அசாமில் வசிக்கும் சட்டபூர்வ இந்திய குடிமக்களை அடையாளம் காணவும், அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வந்த சட்ட விரோத குடியேறிகளை கண்டறிந்து அகற்றவும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு முதன் முதலில் 1951ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு, வங்கத...