Posts

Showing posts from September, 2019

கப்பல் செங்குத்தாக நிற்பது போன்ற கட்டடம் கட்டுவதற்கு அனுமதி.! 30/09/2019

Image
உருக்குலைந்த கப்பல் செங்குத்தாக நிற்பது போன்ற கட்டடம் கட்டுவதற்கு அனுமதி... Sep 30, 2019 கப்பல் ஒன்று உருக்குலைந்து செங்குத்தாக நிற்பது போன்ற கட்டடம் கட்டுவதற்கு செக் குடியரசு நாடு அனுமதி அளித்துள்ளது. அந்நாட்டு தலைநகர் ப்ரேகில் (Prague) சுமார் 135 மீட்டர் உயரம் வரை இந்தக் கட்டடம் கட்டப்பட உள்ளது. கட்டடங்கள் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று கூறிய இங்கிலாந்தின் கட்டடக் கலை நிபுணர்களான டேவிட் கேரியும், தாமஸ் ஐசப்பும் ப்ரேகில் கட்டப்படும் இந்த விசித்திரமான கட்டடம் மக்களின் மனதில் எதிர்மறை எண்ணத்தைக் காட்டும் என்றும் இயற்கை அழிக்கப்படக் கூடியதை இந்தக் கட்டடம் உணர்த்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டடம் கட்டுவதற்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை தீவிரம்... 30/09/2019

Image
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை தீவிரம்... Sep 30, 2019 நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவி விடுவிக்கப்பட்ட நிலையில், இர்ஃபான் என்ற மாணவரின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கில், மாணவர் உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமும், தரகர் ஜோசப் என்பவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய போது, இன்னும் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பாலாஜி, எஸ்.ஆர்.எம். மற்றும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி ஆகியோர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாகப் புகார் எழுந்தது. அவர்களில், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்து வந்த பிரவீன் என்ற மாணவர், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்படவே, அவரையும் அவரது தந்தை சரவணன் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராகுல் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவரவே அவரையும், ராகுலின் ...

தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும்-டிஎன்பிஎஸ்சி.. 29/09/2019

Image
குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும்-டிஎன்பிஎஸ்சி Sep 29, 2019 குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் கிராம புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், புதிய மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். குரூப் 2 பதவிகளுக்கு ஏற்கனவே எழுத்து தேர்வு உள்ள நிலையில் குரூப் 2 ஏ பிரிவுக்கும் எழுத்து தேர்வு கொண்டுவரப்பட்டதாக நந்தகுமார் தெரிவித்தார். இந்நிலையில் தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக 6-ஆம் வகுப்பு முதல் அவர்கள் படித்த பாடத்திட்டம் சார்ந்தே புதிய பாடத் திட்டமும் தேர்வுக் கேள்விகளும் அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். பள்ளி கல்லூரிகளில் படித்த பாடங்கள் சார்ந்து, முன் தயாரிப்பின்றி எதிர்கொள்ளும் வகையி...

நவராத்திரி பண்டிகை கோலாகலமாக தொடங்கியுள்ளது.! 29/09/2019

Image
தொடங்கியது நவராத்திரி விழா..! Sep 29, 2019 நவராத்திரி பண்டிகை நள்ளிரவு முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அக்டோபர் 7ந் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளான இன்று காலை டெல்லி கல்காஜி மற்றும் ஜான்டேவாலான் கோவில்களில் சிறப்பு ஆரத்தியுடன் வழிபாடு நடைபெற்றது. கொல்கத்தாவில் நவராத்திரி விழாவை முதலமைச்சர் மம்தா பானர்ஜி துவக்கி வைத்தார். துர்கா பூஜைக்காக அவர் எழுதிய பாடல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. குஜராத் மாநிலத்தில் நவராத்திரி காலங்களில் புகழ்பெற்றவை கார்பா நடனங்கள். இந்த ஆண்டும் வடோதரா நகரில் வழக்கமான உற்சாகத்துடன் கார்பா நடனப் பயிற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர் இதே போன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் கார்பா மற்றும் தாண்டியா நடனங்களை ஆடி பெண்கள் நவராத்திரியை கொண்டாடினர். மைசூரில் இன்று தசரா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இன்று காலை சாமுண்டி மலையில் நாவலாசிரியர் பைரப்பா சாமுண்டீஸ்வரிக்கு மலர் தூவி தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் மைசூர் மன்னர் வம்சத்தினர் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

பலேனோ ஆர். எஸ். காரின் விலையில் ரூ.ஒரு லட்சம் குறைப்பு.... 28/09/2019

Image
பலேனோ ஆர்.எஸ். காரின் விலையில் ரூ.1 லட்சம் குறைப்பு.! Sep 28, 2019 பலேனோ ஆர்.எஸ். காரின் ஷோரூமுக்கு முந்தைய விலையில், ஒரு லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரிக்குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளித்து, கார் விற்பனையை மீண்டும் அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக, குறிப்பிட்ட மாடல் கார்களின் ஷோரூமுக்கு முந்தைய விலையில், 5 ஆயிரம் ரூபாயை அந்நிறுவனம் குறைத்து அறிவித்தது. ஆல்டோ 800, கே. 10, ஸ்விப்ட் டீசல், செலிரியோ உள்ளிட்ட கார்களுக்கு இந்த விலைக்குறைப்பு பொருந்தும் என்றும் மாருதி சுசுகி கூறி இருந்தது. தற்போது இரண்டாம் கட்ட நடவடிக்கையாக பலேனோ ஆர்.எஸ். மாடல் காரின் விலையில் ஒரு லட்சம் ரூபாயை அந்நிறுவனம் குறைத்துள்ளது. ஷோரூமுக்கு முந்தைய விலையில், ஒரு லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது அந்தக் காரின் ஷோரூமுக்கு முந்தைய விலை 7 லட்சத்து 88 ஆயிரமாகக் குறைந்துள்ளது. 998 சி.சி. பெட்ரோல் எஞ்சின் கொண்ட பலேனோ ஆர்.எஸ்., 75 கிலோ வாட் ஆற்றலும், 150 நியூட்டன் மீட்டர் டார்க் (Torque) திறனும் ...

காந்தி மேற்கொண்ட பயண காட்சிகள்... 28/09/2019

Image
தமிழகத்தில் காந்தி மேற்கொண்ட பயண காட்சிகள்..! Sep 28, 2019 மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழக மக்கள் அவரது அஸ்திக்கு செலுத்திய இறுதி அஞ்சலி உள்பட ஆவணப்படம் கிடைத்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இயங்கிவரும் தேசிய திரைப்பட கருவூலத்தின் இயக்குநர் பிரகாஷ் மகடும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் அரிய நிகழ்வுகள் மற்றும் அவரது மறைவின் போது தமிழக மக்கள் அவரது அஸ்திக்கு செலுத்திய இறுதி அஞ்சலி உள்பட 30 ரீல்கள் அளவிலான ஆவணப்படம் கிடைத்துள்ளது என்றார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வேளையில் இந்த படங்கள் நமக்கு கிடைத்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும் என்று அவர் கூறினார். வெளிநாடுகளைச் சேர்ந்த படத்தயாரிப்பு நிறுவனங்களான பாரமவுண்ட், பாத்தே, வார்னர், யூனிவர்சல், பிரிட்டிஷ் மூவிடோன் உள்ளிட்ட ஸ்டுடியோ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பல்வேறு தனிநபர்களிடம் இருந்து இந்த அரிய ஆவணப்பட தொகுப்பு பெறப்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் மகடும் கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி மற்றும் கும்பகோணம் கோவ...

பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10 % போனஸ்..! 28/09/2019

Image
பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ்..! தமிழக அரசு அறிவிப்பு.. Sep 28, 2019 மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு என்பது ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான 8.33 சதவிகித போனசும் மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து துறை, மின்வாரியம், தமிழ்நாடு தேயிலை கார்ப்பரேஷன், அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாடு வனத்தோட்ட கார்ப்பரேஷன், நிர்வாகத்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கடந்த ஆண்டை போன்று தனித்தனியே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

23 முறை திருமணம் செய்து விவகாரத்து...! 27/09/2019

Image
ஒரே மாதத்தில் 23 முறை திருமணம் செய்து விவகாரத்து.. Sep 27, 2019 சீனாவில் அரசு தரும் வீட்டை பெறுவதற்காக ஒரே மாதத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 23 முறை தங்களுக்குள் மாறி மாறி திருமணம் செய்து விவகாரத்தான செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் மேம்பாட்டுத்திட்டத்துக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் 40 சதுர மீட்டரில் அங்கு வசித்தவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தின் வாசியாக பதிவு செய்யப்பட்ட ஷி, அரசு தரும் புதிய வீட்டை பெற திருமண ஆவணங்கள் தேவைப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் தனது முன்னாள் கணவர் பானை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆறு நாட்களுக்கு பின்பு வீட்டுக்கான ஒப்புதல் கிடைத்ததும் தம்பதி மீண்டும் விவகாரத்து பெற்றனர். இதோடு பான் நிறுத்திவிடாமல் 15 நாட்களுக்குள் தனது மைத்துனியையும் அவரது சகோதரியையும் அடுத்தடுத்து திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். மேலும் வீடு பெறுவதற்காக ஷி தனது மற்றொரு முன்னாள் கணவரையும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல் உறவினர்கள், அண்ணன், தங்கை என ஒரே குடும்பத்த...

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு 27/09/2019

Image
நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு... Sep 27, 2019 நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.  கடந்த மாதம் கிடு கிடு வென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஒரு கட்டத்தில், சவரன் 30 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையானது. வரலாறு காணாத விலையேற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து தங்கம் விலை மீண்டும் 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே சரிந்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைவதும், பின்னர் மீண்டும் உயர்வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு 368 ரூபாய் வரை குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்துக்கு 928 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 20 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெ...

கூட்டுறவு வங்கியில் தினமும் ரூ.10,000 வரை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது..! 27/09/2019

Image
கூட்டுறவு வங்கியில் தினமும் ரூ.10,000 வரை எடுக்க அனுமதி... Sep 27, 2019 பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ்வங்கி தளர்த்தியுள்ளது. அந்த வங்கியின் நிதி நிலையை மேம்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் 60 சதவீத வாடிக்கையாளர்கள் முழுப்பணத்தையும் எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மும்பையில் உள்ள வங்கிகளின் கிளைகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர். இதனிடையே வங்கி ஊழியர்கள் வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி...

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

Image
முதல் முறையாக சுற்றுலா விசா வழங்கும் சவூதி அரேபியா.. Sep 27, 2019 சவூதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது. தங்கள் நாட்டில் பணிபுரிய வருபவர்கள், அவர்களது குடும்பத்தினர், மெக்கா, மதீனா வரும் ஆன்மீக பயணிகள் ஆகியோருக்கு மட்டுமே சவூதி அரசு விசா வழங்குகிறது. விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் சவூதி அரசு விசா வழங்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தற்போது சுற்றுலா விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் என்பதையும் தாண்டி, பன்முகத்தன்மை கொண்டதாக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவூதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வை 2030 திட்டத்தின் கீழ், சுற்றுலாத் தொழிலை வளர்த்தெடுப்பது, சவூதி பட்டத்து இளவரசரின் முக்கிய திட்டமாகும். இந்நிலையில், 49 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதிக்கு சுற்றுலா வரும் வகையில் அதற்கான விசா வழங்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை தலைவர் அஹ்மத் அல்-ஹத்தீப் தெரிவித்துள்ளார். சவூதி அ...

அவுட்கோயிங் கால்களுக்கான அழைப்பு நேர அளவு அதிகரிப்பு..! 27/09/2019

Image
ஜியோ அவுட்கோயிங் கால்களுக்கான அழைப்பு நேர அளவு அதிகரிப்பு... Sep 27, 2019 ஜியோ நிறுவனம் அவுட்கோயிங் கால்களுக்கான அழைப்பு நேர அளவை 20 விநாடிகளிலிருந்து 25 விநாடிகளாக அதிகரித்துள்ளது. ஜியோ நிறுவனம் இண்டெர்கனெக்ஷன் பயன்பாடு கட்டணங்களை குறைப்பதற்காக அவுட்கோயிங் அழைப்புகளுக்கான கால அளவை குறைத்து வைத்திருப்பதாக ஏர்டெல் நிறுவனம் டிராய் அமைப்புக்கு கடிதம் எழுதியிருந்தது. மேலும் இதன் மூலம் ஜியோ பயனாளர்களிடமிருந்து வரும் மிஸ்டு கால்களின் எண்ணிக்கை அதிகரித்து, அந்த எண்ணுக்கு திரும்ப அழைப்பது அதிகரிக்கும் எனவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஜியோ நிறுவனம் கால அளவை அதிகரிக்காவிட்டால் தங்கள் நிறுவனமும் அவுட்கோயிங் அழைப்புகளின் கால அளவை 20 விநாடிகளாக குறைக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்திருந்தது. செப்டம்பர் 6ம் தேதி டிராய் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் உள்ளிட்ட நிறுவனங்கள், 30 விநாடி என்ற கால அளவில் உறுதியாக இருந்தன. அந்தக் கூட்டத்தில் ஒருவர் அழைப்பை எடுத்து பேசுவதற்கு 15 முதல்...

இடைத்தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது 26/09/2019

Image
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை.. Sep 26, 2019 இடைத்தேர்தலுக்கு தடை..! கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 15 தொகுதிகளில் தேர்தல் நடத்த தடை ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 15 பேர் கடந்த குமாரசாமி ஆட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 15 தொகுதிகளுக்கு கடந்த வாரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு 25/09/2019

Image
இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு விற்பனை.. Sep 25, 2019 இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மாதந்தோறும் 2 லட்சம் டன் சமையல் எரிவாயுவை சவுதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விநியோகம் விரைவில் சீர்படுத்தப்படும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது. ஆனால், இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் சமையல் எரிவாயுவின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். இதனால் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அ...

உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் நிறுவனம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது 25/09/2019

Image
போர்ப்ஸின் 2019ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியல்... Sep 25, 2019 போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2019ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் நிறுவனம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிகை உலகளவிலான சிறந்த நிறுவனங்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆய்வை ஸ்டாடிஸ்டா என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது. 50 நாடுகளில் சுமார் 2000 நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்திய அக்குழுவினர், நிறுவனங்களின் நம்பகத்தன்மை, சமூக நடத்தை, தயாரிப்புகள், சேவைகள் மற்றும் செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு முதல் 250 நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில், நிதி சேவை நிறுவனமான விசா (visa) முதலிடத்தையும், இத்தாலியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பெராரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான இன்போசிஸ் இப்பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 31ஆவது இடத்தில் இருந்த இன்போசிஸ் இந்த ஆண்டு 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது...

நட்சத்திர மீன் வடிவிலான அதிநவீன சர்வதேச விமானநிலையம் திறப்பு...! 25/09/2019

Image
பெய்ஜிங் அருகே நட்சத்திர மீன் வடிவிலான அதிநவீன சர்வதேச விமானநிலையம் திறப்பு..! Sep 25, 2019 சீன தலைநகர் பெய்ஜிங் அருகே நட்சத்திர மீன் வடிவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். ஹெபை((Hebei)) மாகாணத்தில் லாங்ஃபாங்((Langfang)) என்ற நகரத்தில் 173 ஏக்கரில் கிட்டத்தட்ட 100 கால்பந்து மைதானத்தின் அளவுக்கு அதிநவீன பெய்ஜிங் டாக்ஸிங் விமானநிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் முதன்மை விமானநிலையத்தில் நிரம்பி வழியும் பயணிகளை சமாளிக்கும் பொருட்டு அங்கிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் இந்திய மதிப்பில் 4 லட்சம் கோடி செலவில் இந்த புதிய விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 4 ஓடுதளங்களையும் 268 வாகன நிறுத்தும் இடங்களையும் 143 ஹெக்டேரில் முனையத்தையும் கொண்டுள்ளது. பசுமையான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையம், ராணுவப் பயன்பாட்டுக்கும் உதவ உள்ளது. நடைபாதை குறைவு, சுற்றுவட்டாரம் முழுவதும் 5ஜி சேவை என 103 புதிய வடிவமைப்புகளையும் 65 புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி உலக தரத்தில் பெய்ஜிங் டாக்ஸிங் சர்வதேச ...

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேற்றம்... 25/09/2019

Image
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 8வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேற்றம்..! Sep 25, 2019 இந்தியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து 8 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் இன்போலைன் என்ற நிதி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள பட்டியலில், 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கொண்ட ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். அந்த பட்டியலில் இந்துஜா குடும்பம் 1லட்சத்து 86 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் இரண்டாவது இடத்திலும், விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜி 1லட்சத்து 17 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பான சொத்துக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மிட்டல் நிறுவனத் தலைவர் லட்சுமி நாரயணன் மிட்டல் ஒரு லட்சத்து 7,300 கோடி ரூபாய் சொத்துக்களுடன் நான்காவது இடத்திலும், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 94 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் 5 வது இடத்திலும், 94,100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் உதய் கோடாக் 6 வது இடத்தில...

இன்று இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு 25/09/2019

Image
இடைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு... Sep 25, 2019 விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றார். இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அவர் கூறினார்.

737 மேக்ஸ் விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு.. 24/09/2019

Image
போயிங் 737 மேக்ஸ் விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு.. Sep 24, 2019 737 மேக்ஸ் விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான 737 மேக்ஸ் ரக விமானங்கள், எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளாகின. இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் 189 பேரும், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். இதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே, போயிங் நிறுவனத்திற்கு எதிராக சுமார் 100 வழக்குகள் தொடுக்கப்பட்டன. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு விபத்துகளில் உயிரிழந்த அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த 346 பேரின் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கென சுமார் 350 கோடி ரூபாயை போயிங் நிறுவனம் கடந்த ஜூலையில் ஒதுக்கியது. அந்த தொகையில் இருந்து 346 பேரின...

இயங்கும் 6 அடி உயர ரோபோ..! 24/09/2019

Image
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 6 அடி உயர ரோபோ...! Sep 23, 2019 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் ஆறடி ரோபோவை தனியார் கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள ஷாசன் ஜெயின் மகளிர் கல்லூரியில் பிசிஏ இறுதியாண்டில் பயிலும் மாணவிகள் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஆறு அடி உயரம், 29 கிலோ எடையும் கொண்ட அந்த ரோபோவுக்கு சாரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நகர்ந்து செல்லும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, வரவேற்பாளர் போல் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக கல்லூரிக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று, கல்லூரி குறித்த விவரங்களை அளிக்கும் வகையிலும், சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் ரோபோவில், உள்ளீடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ரோபோவை, வரும் காலங்களில், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பேசக்கூடிய வகையில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

கிரீன்லாந்து நாட்டில் மீண்டும் பனிப்பாறைகள் உருகி வருகிறது 24/09/2019

Image
கிரீன்லாந்தில் மீண்டும் உருகி விழும் பனிப்பாறைகள்... Sep 24, 2019 கிரீன்லாந்து நாட்டில் மீண்டும் பனிப்பாறைகள் உருகி வருவது சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டின் தெற்குப் பகுதியில் நிக்கோலா பாயேஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற படகினருகே கடலில் மிதந்து வந்த பிரமாண்டமான பனிபாறை சில நொடிப் பொழுதில் கரைந்து விழுந்தது. தொடர்ந்து அவர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்த போது எஞ்சிய பனிப்பாறையும் இரண்டு துண்டாக உடைந்தது. இதனால் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர முடியாமல் திரும்பினர். இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரே நாளில் 11 பில்லியன் டன் அளவிற்கு பனிப்பாறைகள் உருகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி, லக்னோ இடையிலான தேஜாஸ் ரயில் அக்டோபர் 5ம் தேதி முதல் இயக்கப்படும் 24/09/2019

Image
தனியார் ஒத்துழைப்புடன் இயக்கப்படும் தேஜாஸ் ரயில்... Sep 24, 2019 தனியார் ஒத்துழைப்புடன் இயக்கப்படும் டெல்லி, லக்னோ இடையிலான தேஜாஸ் ரயில் அக்டோபர் 5ம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, லக்னோ தேஜாஸ் ரயில் செவ்வாய் கிழமை தவிர ஏனைய 6 நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து மதியம் 3.35க்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு லக்னோ சென்றடையும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 6ம் தேதி காலை 6 மணிக்கு லக்னோவில் இருந்து புறப்பட்டு மதியம் 12.25க்கு டெல்லி வந்தடையும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆனது ஒரு ஏசி எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் மற்றும் ஒன்பது ஏசி சேர் கார் பெட்டிகளை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று எழுச்சி காணப்படுகிறது 23/09/2019

Image
பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் சுமார் 1300 புள்ளிகள் உயர்வு.. Sep 23, 2019 இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எழுச்சி காணப்படுகிறது. காலை வர்த்தகத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் ஆயிரத்து 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளால், கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகளில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 921 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது. இது பங்குச்சந்தை வரலாற்றில், ஒரேநாளில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய உயர்வாக அமைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 7.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒரே நாளில் அதிகரித்ததாக கூறப்பட்டது. மும்பை பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு 145 லட்சம் கோடியாக உயர்ந்து, 2 டிரில்லியன் டாலர்களை கடந்தது. இரு நாள் விடுமுறைக்குப் பிறகு, வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கி, குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் ஆயிரத்...

உலகின் மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற நிறுவனம் திவாலானது 23/09/2019

Image
திவாலானது பழம்பெரும் நிறுவனம்..! Sep 23, 2019 உலகின் மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற பிரிட்டன் பயண நிறுவனம் திவாலானது. அந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரை திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தியுள்ளது. 1841 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தாமஸ் குக் என்ற பயண நிறுவனத்தில், 21 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தாமஸ் குக் நிறுவனத்திற்குச் சொந்தமாக 16 நாடுகளில் உணவகங்கள், விடுதிகள் உள்ளன. ஓராண்டில் சராசரியாக ஒரு கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை, விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற பெருமையை பெற்றது தாமஸ் குக். அந்த நிறுவனத்தின் கடன் சுமை 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கவே, நெருக்கடியும் அதிகரித்தது. கடன் கொடுத்த நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கவே தனது பங்குதாரரான சீனாவின் Fosun நிறுவனத்தை தாமஸ் குக் நாடியது. சுமார் 8,000 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க அந்த நிறுவனமும் ஒப்புக் கொண்டது. ஆனால் கடைசி நேரத்தில் மேலும் ஆயிரத்து 700 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கடன் கொடுத்த நிறுவனங்கள் வற்புறுத்தவே, வேற...

அல்பேனியா நாட்டில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி 22/09/2019

Image
அல்பேனியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி... Sep 22, 2019 அல்பேனியா நாட்டில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. தலைநகர் டிரனா (Tirana) மற்றும் கடற்கரை நகரமான டுர்ரஸ் (Durres) ஆகிய இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியே பலமாக குலுங்கியது. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், 2 கார்கள் உருக்குலைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 49 பேர் லேசான காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அல்பேனியா நாட்டின் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நேரிட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் 21/09/2019

Image
நாடு முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... Sep 21, 2019 மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுடன், 18 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகத்தில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தால் அதிகபட்சமாக 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தவிர, மேலும் 16 மாநிலங்களில் காலியாக உள்ள 61 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி இந்த 64 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிகபட்சமாக கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள் உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே, இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில், பாஜக மற்றும் காங்கிரசுக்கு கர்நாடகம் மிகுந்த முக்கியத்துவம...

உயிர்கள் வாழ ஏற்ற சூழல்களுடன் வெள்ளி கிரகம் இருந்தது 21/09/2019

Image
ஏதோ ஒரு மர்மமான நிகழ்வு வெள்ளியை மாற்றி விட்டதாக ஆராய்ச்சி அறிக்கை... Sep 21, 2019 உயிர்கள் வாழ ஏற்ற சூழல்களுடன் வெள்ளி கிரகம் இருந்ததாகவும், மர்மமான ஒரு நிகழ்வுக்குப் பிறகு அந்தக் கோளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவதாக உள்ள கோள் வெள்ளி. வீனஸ் என்றும் இது அழைக்கப்படுகிறது. அதன் வளிமண்டலம், பூமியைக் காட்டிலும் 90 மடங்கு திடமானது. சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் அந்தக் கிரகத்தின் மேற்பரப்பு வெப்ப நிலை 864 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த அளவு வெப்பம் எஃகையே உருக்கி விடும். உருவில் ஒரே மாதிரியாக இருப்பதால், பூமியும், வெள்ளியும் இரட்டையர் எனச் செல்லமாக அழைக்கப்படுகின்றன. தற்போதைய சூழலில் வெள்ளி கோளுக்கு அருகில் கூட செல்ல முடியாத என்ற நிலையில், அங்கு 700 முதல் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் 68 டிகிரி பாரன்ஹீட் முதல் 122 பாரன்ஹீட் வரையிலான வெப்பம் மட்டுமே நிலவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியுயார்க்கில் உள்ள ஃகாட்டார்ட் இன்ஸ்டிடியூட் (Goddard institute) நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின்...

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.... 21/09/2019

Image
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு Sep 21, 2019 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில் 45 காசுகள் உயர்ந்தது. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதித்ததன் காரணமாக வாகன உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்து. இதனைச் சீர் செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சீர்திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லாதால் பெரு நிறுவனங்களுக்கான வரியை 25 புள்ளி 17 விழுக்காடாக குறைக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து முடங்கிக் கிடந்த பங்கு வர்த்தகம் வேகமெடுத்து புதிய உச்சத்தை அடைந்தது. இதன் பலனாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில் 45 காசுகள் உயர்ந்துள்ளது.

நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை 21/09/2019

Image
நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்... Sep 21, 2019 இஸ்ரோ சிவன் தகவல் நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன் எங்களால் நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை - சிவன் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது - சிவன் ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன, எட்டு கருவிகளும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன - சிவன். 

இன்று பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்துள்ளது 20/09/2019

Image
பங்குச்சந்தையில் உயர்வு..!! Sep 20, 2019 முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதம், 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக, பங்குச்சந்தைகளில் மிதமிஞ்சிய எழுச்சி ஏற்பட்டு, சென்செக்ஸ் ஆயிரத்து 921 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ஒரே நாளில் சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்தது. கோவா தலைநகப் பானாஜியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 22 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இத்துடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் வரிகளை சேர்க்கும்போது, உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25.17 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்னர் 34.9 சதவீதமாக இருந்தது. வேறு சலுகைகளோ, ஊக்கத் தொகைகளோ பெறவில்லை எனில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி தற்போது 22 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டு தொடங்கிய ஏப்ரல் 1ஆ...

ஊழியர்களுக்கு ஒரு லட்சம் போனஸ் 20/09/2019

Image
ஊழியர்களுக்கு ஒரு லட்சம் போனஸ் அறிவிப்பு.. Sep 20, 2019 தெலுங்கானாவில் அரசு சார்ந்த நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் அனைவருக்கும் தலா 1 லட்ச ரூபாய் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கனாவில் உள்ள அரசு நிறுவனமான எஸ்.சி.சி.எல் என்ற நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 48 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எஸ்.சி.சி.எல்.நிறுவனத்தில் தெலுங்கானா மற்றும் மத்திய அரசுக்கு 51:49 என்ற அடிப்படையில் பங்கு உள்ளது. இந்த நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு வருவாய் 1765 கோடி ரூபாயாகும். இந்நிலையில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாயை தசரா போனஸாக அளிப்பதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இதே போல் 2017-18 ம் ஆண்டில், நிறுவனத்தின் 27% இலாபம் தொழிலாளர்களுடன் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு தொழிலாளிக்கும் 60,369 ரூபாய் போனஸாக வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 40530 ரூபாய் அதிகமான போனஸ் தொகையை தெலுங்கானா மாநில அரசு கொடுத்துள்ளது.

வெங்காய விலை அதிகரித்துள்ளது 20/09/2019

Image
கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை..! Sep 20, 2019 வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாயாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லசல்காவோனில், நாட்டிலேயே மிகப்பெரிய மொத்தவிலை வெங்காய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் வெங்காயம் ஏற்றுமதி ஆகிறது. இங்கு வெங்காயத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்தது. இது 4 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும். இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் குவிண்டால் விலை 4300 ரூபாயாக இருந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 700 ரூபாய் விற்றதே மிக அதிகமாகும். கடந்த ஒரு வாரமாகவே விலை அதிகரித்து வந்த நிலையில்தான், லசல்காவோனில் நேற்று குவிண்டால் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் கிலோ 35 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது கிலோ 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தென் மாநிலங்களில் வெங்காய பற்றாக்குறை ஏ...

ஐ.நா பொதுச்சபை கூடுகிறது... 20/09/2019

Image
ஐ.நா. பொதுச்சபை கூடுகிறது - அமெரிக்கா செல்கிறார் மோடி.. Sep 20, 2019 பிரதமர் மோடி, நாளை முதல் அமெரிக்காவில் ஒருவார காலம் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றவுள்ள மோடி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்... இந்திய பிரதமர் நரேந்திர மோடி 22-ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நாளை பிற்பகல் அமெரிக்கா செல்லும் அவர், 22 ஆம் தேதி காலையில், அமெரிக்க எரிசக்தி துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். வட்டமேஜை மாநாடு போல நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது இந்தியாவில் எரிசக்தி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் எடுத்துக் கூறுவதோடு, தொழில் தொடங்க வருமாறும் அவர் அழைப்பு விடுக்க உள்ளார். இதன் பின்னர் அவர் ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி. அரங்கத்திற்கு செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து பங்கேற்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 50,000 ப...

எல்.இ.டி. டி.வி விலை குறைய வாய்ப்பு உள்ளது 19/09/2019

Image
டி.வி. விலை குறைய வாய்ப்பு..! Sep 19, 2019 இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்களுக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால், அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த வரி விதிப்பு அமலில் உள்ளது. இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீதும் மத்திய அரசு விதித்த வரியையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்கள் மீதான 5 சதவிகித வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 4 சதவிகிதம் அளவுக்கு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவராத்திரி,...

பள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன்..! 19/09/2019

Image
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன்.. Sep 19, 2019 பஞ்சாப் மாநிலத்திலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 11-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் மொபைல் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தலைமையில் நடந்தது. இதில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் 11,12 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஸ்மார்ட் போன் இல்லாத,மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்...

லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்.... 19/09/2019

Image
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்.. Sep 19, 2019 புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று ஒருநாள் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும், லாரி தொழிலை அரசு பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்திற்கு அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன், சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும் ...

தேர்தல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் இனி தனியார் பள்ளி ஆசிரியர்களும்...! 18/09/2019

Image
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளில் இனி தனியார் பள்ளி ஆசிரியர்களும்..! Sep 18, 2019 மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட வேலைகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அமல்படுத்தியுள்ள தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துவகை தனியார் பள்ளிகளையும் வரன்முறைபடுத்தி ஒரேவிதமான விதிமுறைகளின்கீழ் கொண்டு வருவதற்காக ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம்’2018 ஜூலை 5-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த செப்டம்பர் 11-ம் தேதி அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. மேலும், அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதலே சட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி சரியாக படிக்காத மாணவர்களை தனியார் பள்ளிகள் இனி பொதுத்தேர்வுகள் எழுதவிடாமல் தடுக்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ தொல்லை ...

6 பாடங்கள் 5 பாடங்களாக குறைப்பு... 18/09/2019

Image
11, 12 ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைப்பு... Sep 18, 2019 6 பாடங்கள் 5 ஆக குறைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைப்பு 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என அரசாணை வெளியீடு.

நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் 18/09/2019

Image
நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் - ரஜினிகாந்த்.. Sep 18, 2019 நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் இந்தியை பொதுவான மொழியாக தமிழகம் மட்டும் அல்லாமல் தென் மாநிலங்கள் எதிலும் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்.... 17/09/2019

Image
ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்..... Sep 17, 2019 அமெரிக்காவில் செயல்படும் உணவகம் ஒன்று, பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கி பிரபலமடைந்து வருகிறது. அமெரிக்காவின் பிரெவட்டன் நகரில் ‘Drexell & Honeybee’ என்ற உணவகம் கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான லிசா தாமஸ் மெக்மில்லன், தனது கணவர் மற்றும் மற்றொரு முதலாளியான பிரட்டீ மெக் மில்லன் ஆகியோருடன் இணைந்து மதிய வேளையில் ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக சுட சுடஉணவு வழங்கி வருகிறார். இவரது உணவகத்தில் ஆர்டர் செய்யும் எந்த உணவுக்கும் விலை இல்லை என்பதால், ஏழைகள், முதியவர்கள் மட்டுமல்லாது, பலரும் வந்து உணவு உண்டு செல்கின்றனர். இதற்கு ஈடாக சிலர் 360 ரூபாய் வரை அங்கிருக்கும் நன்கொடை பெட்டியில் இட்டு செல்வதோடு, சிலர் வீட்டில் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி செல்கின்றனர். எந்த வித லாபமுமின்றி இந்த உணவகத்தை நடத்தி வரும் மெக்மில்லன் தம்பதி இதுபற்றி கூறுகையில், ஏழைகளுக்கு உணவளிப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவிக்கின்றனர். இதற்கு முன், கல்லூரியில் இலவ...

ஈகுவடார் நாட்டு மக்களின் சுயவிவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல்.... 17/09/2019

Image
ஈகுவடார் நாட்டு மக்களின் சுயவிவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல்.. Sep 17, 2019 ஈகுவடார் நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் சுயவிவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈகுவடார் நாட்டில் வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களின் சுயவிவரங்கள் வலைதளங்களில் கசிந்து வருவதாகவும், அதனை உடனடியாக சரிசெய்யும்படியும் அண்மையில் ZDNet என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம், அந்நாட்டின் கணினி சார்ந்த அவசர கால குழுவை தொடர்பு கொண்டு எச்சரித்தது. அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஈகுவடார் அதிபர் லெனின் மொரெனோ பற்றிய தகவல்கள் உள்பட சுமார் ஒரு கோடியே 70 லட்சம் மக்களின் சுயவிவரங்கள் கசிந்திருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக லண்டலிருந்து ஈகுவடார் நாட்டில் தஞ்சமடைய நினைத்து அந்நாட்டு அடையாள அட்டை எண் பெற்றிருந்த விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மற்றும் 70 லட்சம் குழந்தைகளின் முழுப்பெயர், பிறப்பிடம் மற்றும் பிறந்த தேதி, கல்வித் தகுதி, செல்போன் எண், தேசிய அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் கசிந்திருந்தன. Ecuadorean marketing and analytics என்ற நிறுவனம் பா...

7000 பேனர்கள் அகற்றம்.... 17/09/2019

Image
அனுமதியின்றி வைக்கப்பட்ட 7000 பேனர்கள் அகற்றம்... Sep 17, 2019 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 7 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பணிகளில் அரசியல் கட்சிகளை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினரையும் பங்கேற்க செய்து பணிகளை மேற்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வரப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, சாலையில் குழி தோண்ட...

மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. 17/09/2019

Image
மின்னணு, செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்புரிய அழைப்பு Sep 17, 2019 மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவுடன் அதிக அளவு ஏற்றுமதி செய்யும்படி ஆப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதன் உற்பத்தியை பெருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற அசுரத்தனமான சர்வதேச மின்னணு நிறுவனங்களின் பொருட்கள் இந்திய சந்தையில் கிடைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தியாளர்களுக்கு மனிதவளம், முதலீட்டாளர்களுக்கு இணக்கமான தொழில் கொள்கை, இந்தியாவில் உற்பத்தி செய்தால் சலுகைகள் போன்றவை கிடைக்கும் என்று 50 எலக்ட்ரானிக் மற்றும் போன் நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய வட்டமேஜை கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கி விட்டது என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

முழு பௌர்ணமி நிலவை சிறிய விமானம் கடந்து செல்லும் காட்சி...! 16/09/2019

Image
முழு பவுர்ணமி நிலவை சிறிய விமானம் கடந்து செல்லும் காட்சி... Sep 16, 2019 பிரம்மாண்டமான முழு பவுர்ணமி நிலவை சிறிய விமானம் ஒன்று கடந்து செல்லும் ரம்மியமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இந்த அழகிய காட்சியை வீடியோ பதிவு செய்துள்ளது. ஹைனிங் நகரத்தில் உள்ள குவாஞ்சோ பூங்காவில் நடந்த இலையுதிர்கால விழாவின்போது டெலிபோட்டோ லென்சுகளை பயன்படுத்தி மிக துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தா...? 16/09/2019

Image
காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தா..? பள்ளிக் கல்வித்துறை விளக்கம் Sep 16, 2019 பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை இந்த ஆண்டு ரத்து செய்யப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அதனை மறுத்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்றுவரும் காலாண்டுத் தேர்வுகள் வருகிற இருபத்தி மூன்றாம் தேதி முடிவடையவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்தபடி காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்படவுள்ளதாகவும், விடுமுறை நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல தகவல் பரவிவந்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என தெரிவித்துள்ளது. காலாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் விளக்க...