Posts

Showing posts from October, 2019

கிராம பகுதிகளில் புதிய திட்டம்... 01/11/2019

Image
உலக வங்கி நிதியுதவியுடன் கிராம பகுதிகளில் புதிய திட்டம்... Nov 01, 2019 கிராமப் பகுதிகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன்‚ 'தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்‛ செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிகேணியிலுள்ள கலைவாணர் அரங்கத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 550.50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் திறப்பு விழாவும், 112.62 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதேபோல் பல்வேறு துறைகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்குதல், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வங்கி கடனுதவி வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் விழாவும் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, செயல்படுத்தப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், உதவித் தொகை மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர், கிராமபுறங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட...

போராட்டம் வாபஸ்... 01/11/2019

Image
அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்... Nov 01, 2019 போராட்டம் வாபஸ் : 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக போராட்டம் ...

நாளைக்கும் பணிக்கு வராமல் இருந்தால் மாற்று மருத்துவர்களை நியமிக்க அரசு தயங்காது... 30/10/2019

Image
நாளைக்கும் பணிக்கு வராமல் இருந்தால், காலிப் பணியிடங்களாக அறிவித்து மாற்று மருத்துவர்களை நியமிக்க அரசு தயங்காது... Oct 30, 2019 அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலித்து வந்தோம்.. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம்.. போராட்டத்தை அரசு மருத்துவர்கள் உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும்.. நியாயமான, உயர்தர மருத்துவ சேவை ஏழை, எளிய மக்களுக்கு அவசியமானது. அதில் ஏற்படும் தடையை அரசு அனுமதிக்காது.. பணிக்கு செல்லக் கூடிய மருத்துவர்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தடுப்பது ஏற்க கூடியது அல்ல.. அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தேவையான நடவடிக்கை எடுக்கிறது.. நாளைக்கும் தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்தால், காலிப் பணியிடங்களாக அறிவித்து மாற்று மருத்துவர்களை நியமிக்க அரசு தயங்காது.

கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து... 30/10/2019

Image
சென்னை சில்கஸ் துணிக்கடையில் தீ விபத்து... Oct 30, 2019 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவில்பட்டி பிரதான சாலையில் சென்னை சில்க்ஸ் துணிக்கடை உள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த ஜவுளிக்கடையில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், கழுகுமலை ஆகிய பகுதிகளிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தீவிபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். 

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும்... 30/10/2019

Image
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும்... Oct 30, 2019 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், பட்டியலில் இடம்பெறாதவர்கள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளர் படியலில் முதலில் பெயரை சேர்க்க வேண்டும் என்றும், www.nsvp.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர்கள் மண்டல அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவங்களை கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அடுத்த மாதம் 18ந் தேதி வரை காலஅவகாசம் இருப்பதாக தெரிவித்துள்ள மாநிலத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலி...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..! 30/10/2019

Image
வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... Oct 30, 2019 சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், குமரிக் கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று அதிகாலை மழை பெய்த நிலையில், நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் பெய்த மழை அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. பல மணி நேரம் பெய்த மழை காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலும் இரவில் மழை நீடித்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றி உள்ள சாலவேடு, பாதிரி, தழுதாழை, வழூர், மருதாடு, மாம்பட்டு, பொன்னூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலை...

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை... 30/10/2019

Image
கனமழை : பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை..! Oct 30, 2019 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை கொடைக்கானலில் மலைப் பகுதிகளில் பள்ளிகள்- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை நெல்லை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை சென்னை- காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை ராமநாதபுரம், தேனி, விருதுநகர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ... 29/10/2019

Image
கலிபோர்னியா நகரங்களில் பற்றி எரியும் தீயால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்... Oct 29, 2019 அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், வனப்பகுதிகள் தீப்பற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவி வருவதால், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் பலத்த சூரைக்காற்றுடன் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் சொனாமா, விண்ட்சர், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 74,000 ஏக்கர் நிலங்கள் தீயில் கருகியுள்ளன. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் தீப்பற்றி எரிவதால், சுமார் 123 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீயில் சேதமடைந்துள்ளன. இதனால் லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட நகரங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. இந்தநிலையில் கடற்கரையோரம் உள்ள பகுதிகளிலிருந்து சினிமா பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கான மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி 9,70,000 வீடுகளின் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக சுமார் 6 லட்சம் வீடுகளின் மின்இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

நவகிரகங்களில் முதன்மையானவரான குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்... 29/10/2019

Image
விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்தார் குருபகவான்.. Oct 29, 2019 நவகிரகங்களில் முதன்மையானவராக கருதப்படும் குருபகவா அதிகாலை 3. 49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தில் நவக்கிரங்களில் முதன்மையான சுப கிரகம் என அழைக்கப்பட்டு, நற்பலன்களை தரக்கூடிய கிரகமாக குருபகவான் பாவிக்கப்படுகிறார். குரு பகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அதன்படி குருபகவான் இன்று அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார். மேலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு தனது சொந்த இருப்பிடமான தனுசு ராசியை அடைவதால் இந்த குருபெயர்ச்சி கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி குருபரிகார தலமாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஆபத் சகாயேசுவரர் ஆலயத்தில் அதிகாலை சிறப்பு யாகம் நடைப்பெற்றது. தொடர்ந்து குருபகவானுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம் போன்ற ...

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... 29/10/2019

Image
பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளைக் கிணறுகள் - முக்கிய உத்தரவு... Oct 29, 2019 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்டு பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளை கிணறுகள், நீர் உறிஞ்சு கிணறுகள் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வாரியப் பொறியாளர்களுக்கு மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு ஆகியவை செயல்படாமல் இருந்தால் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதோடு, ஆடு மாடு ஆகியவை விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அதனை உடனடியாக மூட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இயங்காத மற்றும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளாக மாற்றுவதற்கு எந்த வகையான தொழில்நுட்ப உதவியையும் தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் மகேஸ்வரன் கூறி...

விவசாயிகள் வருமானத்தைப் பெருக்க தமிழக அரசால் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.... 29/10/2019

Image
விவசாயிகள் வருமானத்தைப் பெருக்க இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு சட்டம்... Oct 29, 2019 விவசாயிகளின் வருமானம் பெருகுவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்ட ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அனுமதி அளித்ததை அடுத்து, அதனை உடனடியாக செயலாக்கத்திற்கு கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்த சாகுபடி முறையில் ஈடுபடும் வேளாண் பெருமக்களின் நலனைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்படும் என 2018 - 2019 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது. அதற்கு இணங்க, தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்ட முன்வடிவு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அந்த சட்டத்திற்கு தற்போது குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த்தின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று பிரத்யேகமாக எந்த சட்டமும் எந்த மாநிலத்திலும் இதுவரை இயற்றப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு முதன் முதலில...

சிறுவன் சுஜித் உயிரிழப்பு... 😭... 29/10/42019

Image
சிறுவன் சுஜித் உயிரிழப்பு.. ஆழ்துளைக் கிணற்றில் இருந்து உடல் மீட்பு..! Oct 29, 2019 மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களான நிலையில் அழுகிய நிலையில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ - கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன், கடந்த 25 ந்தேதி மாலை 5:40 மணி அளவில் வீட்டுமுன்பு விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் மூடப்படாமல் இருந்த 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிறுவன் சுஜித்தை மீட்க முதலில் தீயணைப்பு வீரர்கள், ரெஸ்கியூ ரோபோ மணிகண்டன், தமிழக பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஸ்டன்ட் கலைஞர்கள் அன்பறிவு, ஐஐடி ஆராய்சியாளர்கள் என பலரும் சிறுவன் சுஜித்தை மீட்க முயற்சி மேற்கொண்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் அந்த ஆழ்துளை கிணற்றுக்கு இணையான கிணறு தோண்டும் பணியும் கடுமையான பாறைகளால் கை கொடுக்கவில்லை. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க ஒவ்வொருவர் புதிய புதிய முயற்சிகள் மேற்க...

சீல் என்ற கடல் பிராணியின் பிடியில் இருந்து தப்பிய பெங்குவின், அதனை மீண்டும் எதிர்த்து நின்றது... 28/10/2019

Image
சீல் என்ற கடல் பிராணியின் பிடியில் இருந்து தப்பிய பெங்குவின், அதனை மீண்டும் எதிர்த்து நிற்கும் வீடியோ... Oct 28, 2019 சீல் என்ற கடல் பிராணியின் பிடியில் இருந்து தப்பிய பெங்குவின், அதனை மீண்டும் எதிர்த்து நிற்கும் அரிய வீடியோ வெளியாகி உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இயற்கையிலாளர் டேவிட் ஆட்டன்பரோ ஒரே கிரகத்தில் ஏழு பூமிகள் என்ற புதிய உயிரியல் தொகுப்பு ஆவணப்படத்தை தயாரித்து வருகிறார். பிபிசி தொலைக்காட்சிக்காக 41 நாடுகளில் ஆயிரத்து 749 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவின் சில காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ஆர்க்டிக் பகுதியில் லெப்பர்ட் சீல் எனப்படும் கடல் உயிரினம் பெங்குவினை விரட்டிச் செல்வது படமாக்கப்பட்டுள்ளது. நொடிப் பொழுதில் தப்பிய பெங்குவின் மீண்டும் பனிப்பாறையின் மீது ஏறி நின்று தன்னை விரட்டி வந்த சீலை துணிவுடன் எதிர்கொண்டு அதனை விரட்டியடிக்க முயற்சிக்கிறது. இதுபோன்ற காட்சிகள் அரிதாகவே நடக்கும் என்றும், இதனைப் படமாக்கியது தனக்கு பெருமை என்றும் டேவிட் ஆட்டன்பரோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சுஜித்துக்காக பிராத்திக்கிறார்🙏... 28/10/2019

Image
சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி... Oct 28, 2019 திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்துக்காக, பிரார்த்தனை செய்வதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, பிரதமர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், துணிச்சலும், வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தாம் விரிவாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

3வது நாளாக மீட்பு பணி தீவிரம்.... 27/10/2019

Image
SaveSurjith : தளராத பணி... அயராத முயற்சி... 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்... Oct 27, 2019 புதிய ரிக் எந்திரம் வந்து சேர்ந்தது ராமநாதபுரத்திலிருந்து மற்றொரு ரிக் எந்திரம் வந்து சேர்ந்தது ஏற்கனவே உள்ள ரிக் எந்திரத்தை விட 3 மடங்கு சக்தி வாய்ந்தது புதிய ரிக் எந்திரத்திற்கான அனைத்து பாகங்களும் வந்து சேர்ந்தன தற்போது வந்துள்ள ரிக் எந்திரம் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது ரிக் எந்திரம், அதனுடைய துணை எந்திரங்கள் மொத்தம் 5 டிரைலர் லாரிகளில் வந்துள்ளன மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை மீட்பு பணியை இன்னும் துரிதப்படுத்த முடியுமா என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார் புதிய ரிக் எந்திரத்தின் பாகங்களை இணைப்பதற்கு கால அவகாசம் ஏற்படும் நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காக ஏற்கனவே துளையிடும் எந்திரத்தின் பணி தொடர்கிறது தற்போது வரை 36 அடி ஆழம் துளையிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் 40 அடியை எட்டுவது மிக கடினமாக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் அதிகாரிகள் தகவல் புதிதாக அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுக்குள் இறங்...

600 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனை..! 26/10/2019

Image
தந்தேராஸ் பண்டிகையையொட்டி 600 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனை... Oct 26, 2019 தந்தேராஸ் பண்டிகையையொட்டி 600 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை காலங்களில் தந்தேராஸ் எனும் பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், தங்கம் உள்ளிட்ட புதிய பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு தந்தேராஸ் பண்டிகையையொட்டி, 600 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக டெல்லியில் மட்டும் சுமார் 250க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோல, கையிருப்பில் உள்ள அனைத்து ஜி.எல்.வி எஸ்.யூ.வி (GLE SUV) ரக கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி.எல்.வி எஸ்.யூ.வி ரக கார்கள், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆழ்துளை கிணறுகளை மூடுக..! 26/10/2019

Image
ஆழ்துளை கிணறுகளை மூடுக..! மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..! Oct 26, 2019 மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டம் தோறும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத, பராமரிப்பு இல்லாத, முறையாக மூடப்படாத கிணறுகளை ஆய்வு செய்து உடனடியாக மூடவும் அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரமே இந்த உத்தரவு பிறக்கப்பட்டு பெரும்பாலான ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் தனியார் சார்பிலோ அரசு சார்பிலோ போடப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுத்து, அவற்றை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். ஈச்சங்காடு கிராமத்தில் உப்பனாறு ஓரம் உள்ள பகுதிகளில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர...

அதிகாலை 5.30 மணிக்குப் பிறகு சிறுவனின் சத்தம் கேட்கவில்லை... 26/10/2019

Image
அதிகாலை 5.30 மணிக்குப் பிறகு சிறுவனின் சத்தம் கேட்கவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை... Oct 26, 2019 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு குழந்தையை மீட்க இந்த நிமிடம் வரை போராடிக் கொண்டிருக்கிறோம் உயர்நிலை வல்லுநர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர் முதலில் சிறுவனின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது சிசிடிவி காமிரா மூலம் கண்காணித்துக் கொண்டே கயிறை இறக்கினோம் ஒரு நிமிடம் கூட தங்குதடையின்றி குழுவினர் அனைவரும் போராட்டம் கயிறு கட்டி மேலே இழுக்கும் முயற்சி 3 முறை நழுவிவிட்டது கையில் கட்டியிருந்த கயிறு உருவி, சிறுவன் நழுவி 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான் 70 அடி ஆழத்திற்கு சிறுவன் சென்றாலும் சிறுவன் மூச்சுவிடும் ஓசை தொடர்ந்து கேட்டது ஐஐடியினர் வழங்கிய கருவி மூலம் மீட்பு முயற்சி நடைபெற்றது ஆக்சிஜன் தொடர்ந்து அதிகபட்சமாக செலுத்திக் கொண்டேயிருக்கிறோம் முதலமைச்சர் உள்ளிட்டோர் நிலவரத்தை கேட்டறிந்தார்கள் அதிகாலையில் சிறிதளவு மண் விழுந்து மூடியதால் பின்னடைவு ஏற்பட்டது மீட்புப் பணி சவாலாக உள்ளது 70 அடி ஆழத்தில் சிறிய இடைவெளி கூட இல்...

2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்... 26/10/2019

Image
அரசு மருத்துவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்... Oct 26, 2019 தகுதிக் கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு மருத்துவர் பணியிடங்களை நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும், தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பவையே அரசு மருத்துவர்களின் கோரிக்கை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களான பின்னரும் அரசு தரப்பு உறுதியளித்தபடி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். சேலம், நாமக...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை மீட்பு பணி தீவிரம்... 25/10/2019

Image
ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை...மீட்கும் பணி தீவிரம்..! Oct 25, 2019 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மணப்பாறையை அடுத்த நடுக்காட்டு பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ, அங்கு சமீபத்தில் தோட்டத்துடன் கூடிய வீட்டை விலைக்கு வாங்கினார். கொத்தனாரான அவர், தோட்டத்தில் பயிரிட்ட சோளத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, ஆழ்குழாய் கிணறு தோண்டினார். 30 அடி ஆழத்திற்கு தோண்டிய நிலையில் தண்ணீர் இல்லாத தால் அதனை மூடிவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், அங்கு போடப்பட்ட மண் கரைந்து உள்ளே செல்ல, குழி மீண்டும் திறந்து கொண்டது. இந்நிலையில் பிரிட்டோவின் இரண்டு வயது மகன் சுஜின், இன்று மாலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாரத விதமாக அந்த குழிக்குள் விழுந்து விட்டான். இதைகண்ட பிரிட்டோவும் மற்றோரும் சுஜினை மீட்க முயன்றனர். ஆனால் 25 அடி ஆழத்தில் குழந்தை சிக்கிக் கொண்டதால் அவர்களை முடியவில்லை. இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினரும், போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் அங...

வருமான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது... 25/10/2019

Image
வருமான வரிச் சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு திட்டம்... Oct 25, 2019 வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 5 சதவீத வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. 5 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கான அதிகபட்ச வரி வரம்பு 42.74 சதவீதமாக உள்ளது. தனிநபர் வருமான வரியில் சில சலுகைகளை அறிவிப்பதன் மூலம் நுகர்வை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆண்டுக்கு பத்துலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உடைய பிரிவினருக்கு சலுகைகளை அளிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது இப்பிரிவினர் 30 சதவீதம் வரி செலுத்தி வருகின்றனர். வீட்டு வாடகை வரம்பை உயர்த்துவது, வங்கி டெபாசிட்டுக்கான வரிவிதிப்பை தவிர்ப்பது போன்ற சலுகைகளை வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறியுள்ளது... 24/10/2019

Image
தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேற்றம்... Oct 25, 2019 ஜிஎஸ்டி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகளின் 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியலை உலக வங்கி நேற்று வெளியிட்டது. இதில், 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 63-ஆவது இடத்தை இந்தியா பிடித்தது. இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திவால் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதே இந்தப் பட்டியலில் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளதற்கு முக்கியக் காரணம் என்றார். சரக்கு-சேவை வரி நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாகவும், இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தரவரிசையை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்க மாநில அரசுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். 

நடைபெற்ற இடைத்தேர்தலில் பல இடங்களில் பாஜக வாகை சூடியிருக்கிறது... 24/10/2019

Image
பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை... Oct 24, 2019 நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 50க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், உத்தரப்பிரதேசம் உட்பட பல இடங்களில், பாஜக வாகை சூடியிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில், 11 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களில் வெற்றிபெற்றது. குஜராத் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகியவை தலா 3 தொகுதிகளில் வாகை சூடியுள்ளன. கேரளாவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை தலா 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றன.முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. பீகாரில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம், ஏ.ஐ.ஐ.எம், சுயேட்சை ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. பஞ்சாபில், 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் காங்கிரஸ் 3 தொகுதியிலும், ஷிரோன்மணி அகாலி தளம் ஒரு தொகுதியிலும் வாகை சூடின. அசாம் மாநிலத்தில் ந...

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்... 24/10/2019

Image
நாளை முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்... Oct 24, 2019 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, பணியிடக் கலந்தாய்வு, உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவசர அறுவை சிகிச்சை மற்றும் டெங்கு காய்ச்சல் சிகிச்சை தவிர வேறு எந்த மருத்துவ பணியிலும் அரசு மருத்துவர்கள் ஈடுபட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவிலும் சிகிச்சை அளிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது... 24/10/2019

Image
"இடைத்தேர்தல் வெற்றி... உண்மைக்கு கிடைத்த வெற்றி" - முதலமைச்சர் பெருமிதம்... Oct 24, 2019 விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி, உண்மைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், இந்த வெற்றித் தொடரும் என்றும் கூறியிருக்கிறார். இரு தொகுதிகள் இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி முகம் கண்டதை அடுத்து, முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகை புரிந்தார். அங்கு, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு வரலாற்று வெற்றி என்றார். அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரின் உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும், வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், முதலமைச்சர் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில், பொய்யான வாக்குறுதிகளை ...

புதிய பாடத்திட்டத்தின் காரணமாக 10,11,12-ம் வகுப்பு தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது... 23/10/2019

Image
10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு..! Oct 23, 2019 புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-2020-ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே 3 மணி நேரமாக இருந்த தேர்வு நேரம், சில ஆண்டுகளுக்கு முன் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் முழுவதும் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் , தேர்வு எழுதும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தேர்வு எழுதும் நேரத்தை இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் 600 மதிப்பெண்களுக்கு நடைபெறும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 500 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் 3 மணி ...

BSNL தனியார் மயமாகாது.... 23/10/2019

Image
BSNL தனியார் மயமாகாது.! மத்திய அரசு திட்டவட்டம்.... Oct 23, 2019 இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தை, தனியார் மயமாக்கும் திட்டமில்லை என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையையும், மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம், அவரது அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள டெல்லி 7 லோக் கல்யாண் மார்க்கில் ((7 Lok Kalyan Marg)) நடைபெற்றது. கேபினட் கூட்டத்திற்கு பின், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL ஒருபோதும் தனியார் மயமாக்கப்படமாட்டது என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு கைவிடப்படாது என்றும், உறுதிபடக் கூறினர். BSNL மற்றும் MTNL ஒருங்கே இணைக்கப்படும் என்றும், அதன் மறுசீரமைப்புக்காக 14,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மத்திய அரசு கூறியிருக்கிறது. 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை, BSNLக்கு ஒதுக்கீடு ...

புதிய சிக்கலில் இன்ஃபோசிஸ்.... 23/10/2019

Image
புதிய சிக்கலில் இன்ஃபோசிஸ்? Oct 22, 2019 இன்ஃபோசிஸ் சிஇஓ-வும், தலைமை நிதி அதிகாரியும் சேர்ந்து, லாபத்தை பெருக்கிக் காட்டுவதற்காக முறையற்ற வழிகளை கையாள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் அந்நிறுவன பங்குகள் 16 சதவீதம் அளவுக்கு சரிந்தன. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், உலகில் பல்வேறு நாடுகளில் கிளைபரப்பியுள்ளது. அந்நிறுவன ஊழியர்கள் சிலர், "நெறிசார்ந்த ஊழியர்கள்" என்ற பெயரில், இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்திற்கும் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், சிஇஓ சலில் பரேக் மற்றும் சிஎஃப்ஓ நிலஞ்சன் ராய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். லாபத்தை பெருக்குவதற்கும், குறுகிய கால ஆதாயத்திற்காகவும் இருவரும் இணைந்து, கணக்குவழக்குகளில் முறையற்ற வழிகளை கையாள்வதாக அதில் புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை அளிக்க தயார் என்றும், இந்த புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த குழுவினர் கூறியுள்ளனர். இந்நிலையில், இந்த புகார் குறித்து சுயேச்சையான விசாரண...

12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை... 23/10/2019

Image
முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை..! 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை... Oct 23, 2019 மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்ட உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் 12 மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 119.330 அடியை எட்டியது. முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை எட்ட இருப்பதால், இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால், காவிரிக் கரையில் அமைந்துள்ள சேலம், நாமக்கல்,ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி,புதுக்கோட்டை,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும்...

மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது... 22/10/2019

Image
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கேபினட் கூடுகிறது... Oct 22, 2019 மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள, டெல்லி 7 லோக் கல்யாண் மார்கில் (7 Lok Kalyan Marg) நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட கேபினட் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது... 22/10/2019

Image
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுத் திட்டத்தில் மாற்றம்.! Oct 22, 2019 தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 27 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது. இரண்டு தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் எழுத்துத் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு சில மாற்றங்கள் தேவை என சிலர் கோரிக்கை விடுத்ததை அடுத்து, தேர்வுகளுக்கான தேர்வுதிட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. முதனிலைத் தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, சமூக - அறிவியல் இயக்கங்கள், தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம், என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் 8, 9 க்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் கேள்விகள...

நாளை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை... 23/10/2019

Image
மகாராஷ்டிரம், ஹரியானாவில் நாளை வாக்கு எண்ணிக்கை... Oct 23, 2019 மகாராஷ்டிரம் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும், ஹரியாணா சட்டப்பேரவையிலுள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்படவுள்ளன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டுள்ளன. இருமாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணி, காலை 8 மணியளவில் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதனால் படிப்படியாக முன்னணி நிலவரங்கள் வெளியாகும். பிற்பகலுக்குள் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகள், இரண்டு மாநிலங்களிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவித்தன.

LED டிவி திருட்டு பதிவான சிசிடிவி காட்சிகள்... 22/10/2019

Image
ரூ.50 லட்சம் மதிப்பு எல்இடி டிவிக்களை திருடிய சிசிடிவி காட்சிகள்... Oct 22, 2019 பீகாரில், குடோன் காவலாளி மற்றும் லோடு வேன் டிரைவரை பிணை கைதியாக வைத்து, கொள்ளையர்கள் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்இடி டிவிக்களை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் குயிக் சொலியூஷன் என்ற எலக்ட்ரானிக் நிறுவனம் பண்டிகை தின விற்பனைக்கென புதிதாக டிவிக்களை கொள்முதல் செய்திருந்தது. இந்த லோடுகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று கடந்த ஞாயிற்று கிழமை நிறுவன குடோனுக்கு வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து 4 பேர் வந்துள்ளனர். பின்னர் காவலாளியிடம் தண்ணீர் கேட்பது போல் பேச்சுக்கொடுத்து குடோனுக்குள் சென்று கும்பல், காவலாளி மற்றும் வேன் டிரைவரை துப்பாக்கி காட்டி மிரட்டி மடக்கியுள்ளனர். அதன்பின் அவர்களது செல்போன்களை பறித்த கும்பல், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 எல்இடி டிவிக்கள், வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை... 22/10/2019

Image
கனமழை : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..! Oct 22, 2019 நீலகிரி மாவட்டத்தின் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். இதேபோல் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு மழை நீடிக்கும்... 21/10/2019

Image
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..! Oct 21, 2019 தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பௌலர்கள் அசத்தல்.! 21/10/2019

Image
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பௌலர்கள் அசத்தல்..! தெ.ஆ., ஃபாலோ ஆன்... Oct 21, 2019 இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களில் சுருண்டது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்திருந்த போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அணித் தலைவர் விராட் கோலி அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார். ரகானே சதம் அடித்தார். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்திலும் அந்த அணி தடுமாறியது. ஜுபைர் ஹம்சா மட்டும் பொறுமையுடன் ஆடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பவுமா, லிண்டே ஆகியோர் ஓரளவு ரன் சேர்த்தனர். இறுதியில் அந்த அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் உமேஷ் ய...

3 ஆண்டுகளுக்குப் பிறகு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்படும்... 21/10/2019

Image
5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பின் அமல்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்... Oct 21, 2019 ஐந்து மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார். 

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து கண்டெடுப்பு..! 21/10/2019

Image
8000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து கண்டெடுப்பு.. Oct 21, 2019 சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்காலத்தை சேர்ந்த முத்து அபுதாபியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி அருகே உள்ள தீவுப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கற்காலத்தை சேர்ந்த கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப்பட்ட மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அதனுடன் பழையமான முத்து ஒன்றும் கிடைத்துள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அந்த முத்து கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து ’அபுதாபி முத்து’ என்று பெயரிடப்பட்ட இந்த முத்து அங்குள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இம்மாதம் 30ம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zombie Walk எனப்படும் விநோத விழா... 20/10/2019

Image
ஆண்டுதோறும் நடைபெறும் Zombie Walk எனப்படும் விநோத விழா... Oct 20, 2019 மெக்சிகோவில் ஆண்டுதோறும் நடைபெறும் Zombie Walk எனப்படும் விநோத விழாவில் பேய்களை போன்று வேடமணிந்த மக்கள் ஊர்வலமாக சென்றனர். தலைநகர் மெக்சிக்கோ சிட்டியில் உள்ள வீதிகளில் திரண்ட சிறார்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பேய்களை போன்று வேடமணிந்து, சிகப்பு நிறச்சாயங்களை பூசிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

சிறந்த விமான இருக்கைக்காக சிங்கப்பூர் விமானம் தேர்வு... 20/10/2019

Image
சிறந்த விமான இருக்கைக்காக சிங்கப்பூர் விமானம் தேர்வு... Oct 20, 2019 உலகில் மிகச் சிறந்த விமான இருக்கையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருக்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹீத்ரு விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர்பஸ் ஏ380 விமானத்தின் இருக்கைகள் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பயணிக்கும் 50 சதுர அடி உள்ள தனி அறையாக இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரட்டை படுக்கைகள் கொண்ட பெட் வசதி, தனியான குளியலறையுடன் கூடிய கழிவறை, முழுச்சுற்று சுழலும் இருக்கைகள். விருப்பப்படி திருப்பிக் கொள்ளக் கூடிய டிவிக்கள் என அனைத்து சிறப்பம்சங்களும் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 6 அறைகள் மட்டுமே கொண்ட இந்த விமானத்தில் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிக்க நபர் ஒருவருக்கு இந்திய மதிப்பில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

TCS ஊழியர்கள் சம்பளத்தில் மாற்றம்... 19/10/2019

Image
TCS ஊழியர்கள் சம்பளத்தில் மாற்றம்... Oct 19, 2019 லாபத்தை அதிகரித்து, சம்பள செலவினத்தை குறைக்கும் நோக்கில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறது. அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்ட இளம்பொறியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தவும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்று பணியில் சிறப்பாக செயல்படும் அனுபவமிக்க ஊழியர்களின் ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாது ஒப்பந்த செலவினங்களை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்காலிக ஊழியர்களுக்கு பதில் முழு நேர பணியாளர்களை அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. அதனுடன் நடப்பாண்டு கூடுதலாக 26,453 ஊழியர்களை பணி நியமனம் செய்தது போல், அடுத்தாண்டும் முதல் 6 மாதங்களில் அதே எண்ணிக்கையில் புதிதாக ஊழியர்களை நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் வேலை இல்லா நிலை உருவாகாது எனவும், நிறுவனமும் புத்துணர்ச்சி பெற்று புதுப்பொலிவுடன் இருக்கும் எனவும் டிசிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NH 844 விரிவாக்க பணியை மாற்று வடிவில் செயல்படுத்த உத்தரவு... 19/10/2019

Image
நெரலூரு முதல் அதியமான்கோட்டை வரை NH 844 விரிவாக்க பணியை மாற்று வடிவில் செயல்படுத்த உத்தரவு... Oct 19, 2019 கர்நாடகம்- தமிழகம் இடையே மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை தற்போதைய வடிவில் செயல்படுத்தாமல், திருத்தம் செய்து மாற்று வடிவில் செயல்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 844இல் பெங்களூருவில் உள்ள நெரலூரு முதல் தர்மபுரி அருகே அதியமான்கோட்டை வரை சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக சுற்றுச்சூழல் பாதிப்பு கணக்கீட்டு ஆணையம், பெங்களூருவில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக பிராந்திய அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோரை கொண்ட குழுவிடம் அறிக்கை கோரியது. சம்பவ இடத்தை பார்வையிட்டு அக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், தற்போதைய வடிவில் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை செயல்படுத்துவதற்கு எதிராக பரிந்துரைகள் அளிக்கப்பட்டிரு...

இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி... 18/10/2019

Image
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி... Oct 18, 2019 தீபாவளியன்று காலை ஒரு மணி நேரமும் இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க புதுச்சேரியில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை புதுச்சேரி சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள், நீதிமன்ற வளாகம் மற்றும் கல்விக் கூடங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவுவரை பட்டாசு வெடிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு அதிக புகையை வெளியேற்றும் பட்டாசுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை..! 18/10/2019

Image
உலகிலேயே நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை தொடக்கம்... Oct 18, 2019 உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. குவாண்டாஸ் போயிங்787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்துறையில் புதிய வரலாற்றை படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, உறக்கம், மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளாதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். பயணிகளின் அனுபவத்தை தொடர்ந்து குவாண்டாஸ் போயிங் 787 விமானங்களின் சேவை 2022ம் ஆண்டுமுதல் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை... 18/10/2019

Image
கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்... Oct 18, 2019 பிரபல சாமியார் கல்கியின் வீடு, ஆசிரமம், ஆன்மீகப் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, வைரம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இதன் நிறுவனர் விஜயகுமார், தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக் கொண்டு ஆசிரமங்கள், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கிளைபரப்பியுள்ள கல்கி ஆசிரமம், ரியல் எஸ்டேட், கட்டுமானம், விளையாட்டுத்துறைகளிலும் கால்பதித்துள்ளது. கல்கி அவதாரம் என அறிவித்துக் கொண்ட விஜயகுமார் மற்றும் அவரது மகன் கிருஷ்ணாவினால் "வெல்னஸ் குரூப்" என்ற பெயரில் நிர்வகிக்கப்படும் இந்த குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. அதன் அட...

9 லட்சம் கோடி ரூபாயை தாண்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய சாதனை... 18/10/2019

Image
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிய சாதனை... Oct 18, 2019 பங்குகள் விலை அடிப்படையிலான சந்தை மூலதன மதிப்பில் 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தையில் இன்று முற்பகல் நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து தலா ஆயிரத்து 428 ரூபாய்க்கு விற்பனையாகின. இதனால் அந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பும் 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை முன்னிட்டு பங்கு விலைகள் அதிகரித்தன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்தது. தற்போது 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய முதல் நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் படைத்துள்ளது.

இந்திய சில்லறை சந்தை மதிப்பு வளர்ச்சியடையும்.... 17/10/2019

Image
இந்திய சில்லறை சந்தை மதிப்பு வளர்ச்சியடையும் என கணிப்பு... Oct 17, 2019. இந்தியாவின் சில்லறை விற்பனை சந்தை மதிப்பு, வருகிற 2021ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர்களாக உயரும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வர்த்தக கூட்டமைப்பின், சேவை மற்றும் தணிக்கை அமைப்பான ஃபிக்கி-டெலாய்ட் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 2026ஆம் ஆண்டு, இந்திய சில்லறை விற்பனை சந்தையின் மதிப்பு, ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி டாலர்களாக இருக்கும் என்றும், ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று, நாட்டின், மின்னணு வணிகச் சந்தையின் மதிப்பு, வருகிற 2021ஆம் ஆண்டில், 8 ஆயிரத்து 400 கோடி டாலர்களாக இருக்கும் என்றும், அதுவே, 2026ஆம் ஆண்டில், மின்னணு வணிகச் சந்தையின் மதிப்பு, 20 ஆயிரம் கோடி டாலர்களாக உயரும் என்றும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் என்றும் அழைக்கப்படும், மின்னணு வணிக சந்தையின் ஆகியனவற்றின் வளர்ச்சி, பெரிய நகரங்கள், மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாது, சிறு, குறு நகரங்களில், நன்றாக வளரும் என்று எதிர்...